அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பதவியை பறித்தாலும் சிறையில் தள்ளினாலும் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை..!! ராகுல் காந்தி ஆவேசம்..!!
தகுதி நீக்கம் செய்வதாலோ அல்லது சிறையில் தள்ளுவதாலோ நான் பயந்துவிட மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி என்ற பெயர் உள்ளவர்கள் என்று தொடங்கி ராகுல்காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாக குஜராத், சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு உடனடியாக ஜாமீனும் வழக்கப்பட்டதுடன், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து நேற்று முன்தினம் மக்களவை செயலகம் உத்தரவிட்டது. இது நாடு முழுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிற்பகல் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி கூறியதாவது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது பிரதமர் மோடி பயந்தார், அவரது கண்களில் பயத்தை பார்த்தேன். இதன் காரணமாகவே எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மக்களை திசை திருப்புவதற்காகவே இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
என்னை தகுதி நீக்கம் செய்வதாலோ அல்லது சிறையில் தள்ளுவதாலோ நான் பயந்துவிட மாட்டேன். அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு என்று கேட்பதை நிறுத்தி விடவும் மாட்டேன். இந்த கேள்விகளை தொடர்ந்து கேட்பேன். மிரட்டல்களுக்கு அஞ்சவும் மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.