வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
அம்மாடியோவ்.. புகையிலை மென்ற இளைஞர் வெட்டிகொலை : உதவிகூட செய்ய முன்வராத மக்கள்..!
கோவில் அருகே புகையிலை மென்ற இளைஞர் 2 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் உள்ளது. இந்த பொற்கோவிலுக்கு அருகே ஹர்மந்திர் சாகிப் பகுதியில் சந்தை உள்ளது. நேற்று முன்தினத்தில் சந்தை அருகே வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்து இரண்டு பேர் வாலிபரை வாளால் தாக்கி சரமாரியாக வெட்டினர்.
இந்த சம்பவத்தில் அவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது வாலிபரை யாரும் காப்பாற்றும் முன்வரவில்லை. இரவு வரை வாலிபர் உயிருக்காக போராடி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிய வரவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இளைஞர் ஹர்மன் ஜீத் சிங் (வயது 22) என்பது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்க்கையில் இளைஞரின் படுகொலை பலரும் வேடிக்கை பார்த்தது உறுதியானது.
இதனையடுத்து, கொலையாளிகளான ரமன்தீப் சிங் என்ற இளைஞரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவலும் அம்பலமானது. சம்பவத்தன்று ஹர்மன் ஜீத் மதுபானம் அருந்திவிட்டு அமிர்தராசரஸ் பொற்கோவில் அருகே புகையிலைமென்று தின்று இருக்கிறார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டார் என ரமன்தீப் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.