அரிவாளால் வெட்டு பட்டும் வழிப்பறி திருடனுடன் சண்டையிட்டு போராடி மடக்கிப்பிடித்த வீரச் சிறுமி! வைரல் வீடியோ!

அரிவாளால் வெட்டு பட்டும் வழிப்பறி திருடனுடன் சண்டையிட்டு போராடி மடக்கிப்பிடித்த வீரச் சிறுமி! வைரல் வீடியோ!punjab-15-year-old-girl-fights-snatchers-to-save-her-mo

பாஞ்சாப் மாநிலம் ஜலந்தர்-கபுர்தலா சாலைக்கு அருகிலுள்ள தீன் தயால் உபாத்யா நகரின் சாலை வழியாக 15 சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியின் கையிலிருந்த மொபைல் போனை பறித்துள்ளனர்.

சற்றும் தயங்காமல் அந்த சிறுமி உடனடியாக பைக்கின் பின்புறம் இருந்த நபரை பிடித்து இழுத்துள்ளார். பிடிபட்ட கொள்ளையன் கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை தாக்கியும் சிறுமி விடாபிடியாக இருந்துள்ளார்.

அதனையடுத்து அப்பகுதி மக்கள் ஓடி வந்து சிறுமிக்கு உதவியதுடன், அந்த கொள்ளையனையும் போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர். தற்போது காயமடைந்த 15 வயது சிறுமி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.