இந்தியா

காதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண்.! கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.! வைரலாகும் வீடியோ

Summary:

காதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண்.! கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.! வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அந்த இளம்பெண் தனது காதலனுடன் ஊரை விட்டு சென்றுவிட்டார். அந்தப் பெண்ணுக்கு அவரது சகோதரி உதவியதாக தெரிகிறது.

எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் கிராம மக்களிடம் சிக்கி கொண்டனர். இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் மூவரின் கழுத்தில் இருசக்கர வாகன டயரை மாட்டிவிட்டு நடுரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் நடனம் ஆட வைத்து தண்டனை கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இந்தச் செயலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement