தமிழகம் இந்தியா உலகம்

இன்று பிப்ரவரி 14! மறக்க முடியாத நாள்! யாரும் மறக்கக்கூடாத நாள்! செலுத்துங்கள் உங்கள் மரியாதையை!

Summary:

pulvama attack day

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தியதால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் வந்துகொண்டிருந்தபோது போது திடீரென தற்கொலைப் படை தீவிரவாதி ஓட்டி வந்த வாகனம் அந்த வாகனங்களில் வேகமாக மோதி வாகனங்களும் வெடித்து சிதறியது. 

புல்வாமாவில், நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு செப்டம்பர் 2016இல் யூரி ராணுவத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த தீவிரவாதத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர். 

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் கிருஷ்ணவேணி (23) எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே சுப்பிரமணியன் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இன்றைய தினத்தில் உரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி தேசத்திற்கு பெருமை சேர்ப்போம்.


Advertisement