அரசியல் இந்தியா Covid-19

புதுச்சேரியில் முதல் அரசியல் பிரமுகர் கொரோனாவுக்கு பலி!

Summary:

puduchery NRcongress general secretary balan died for corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் (67) கொரோனா பாதிப்பால் இன்று காலை உயிரிழந்தார். 

முன்னாள் எம்எல்ஏ-வான பாலன் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்தார்.

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலனுக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் பாலன் ஆவார்.


Advertisement