தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இங்கு அனுமதி - அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!Puducherry Minister Namachivayam Pressmeet about If Teacher Vaccinated Will Allow School

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிக்குள் பணியை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என புதுவை மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, 2 வருடம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடி இருந்தது. 

கடந்த செப். மாதம் முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நவ. மாதம் முதலாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவெடுத்த நிலையில், மழையால் அது கைகூடவில்லை. 

India

இதனால் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி வகுப்புகள் அரை நாட்கள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் முழுநேர வகுப்புகள் செயல்படும். பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே நடைபெறும்.  

டிச. 6 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுநேர பள்ளிகள் திறப்புக்கு பின்னர் மதிய உணவு வழங்கப்படும். 

India

கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 95 % ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிக்குள் ஆசிரியர்கள் அனுமதி செய்யப்படுவார்கள். பெற்றோர்கள் பள்ளியை திறக்க கோரிக்கை வைத்துள்ளதால், பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

ஆன்லைன் வகுப்பும் தொடர்ந்து நடைபெறும்.  ஓமைக்ரான் வைரஸ் உலகளவில் தொடக்க நிலையிலேயே உள்ளது. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என்று தெரிவித்தார்.