தமிழகம் இந்தியா

17 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த காதலன்.. விடுதியில் நடந்த கொடுமை.. பகீர் தகவல்.!

Summary:

17 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த காதலன்.. விடுதியில் நடந்த கொடுமை.. பகீர் தகவல்.!

பள்ளியில் பயின்று வந்த சிறுமியை கடத்தி சென்று, விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காதலன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டான்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், திருநள்ளாறு அம்பகரத்தூர் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற நிலையில், மீண்டும் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணாததால், திருநள்ளாறு காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். மேலும், சிறுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. 

சிறுமி வைத்திருந்த செல்போன் நம்பரை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அது பயன்பாட்டில் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சிறுமி சென்னையில் இருப்பது தெரியவரவே, சென்னை சென்ற தனிப்படை அதிகாரிகள் விடுதியில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர். மேலும், அவருடன் இருந்த வாலிபரையும் கைது செய்தனர்.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், செட்டிமண்டபம் முத்தையா நகரில் வசித்து வரும் முஷாரப் (வயது 22) என்ற வாலிபருடன் சிறுமிக்கு சமூக வலைத்தளம் வழியே நட்பு ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. காதலியை அவ்வப்போது வந்து நேரிலும் சந்தித்து சென்றுள்ளார். 

இந்த சூழலில், கடந்த 7 ஆம் தேதி சிறுமியிடம் திருமண ஆசை காண்பித்து, சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர், முஷாரப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Advertisement