இந்தியா

தங்கையை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்த காமுக அண்ணன்.. அதிரவைக்கும் சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு.‌!

Summary:

தங்கையை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்த காமுக அண்ணன்.. அதிரவைக்கும் சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு.‌!

தங்கை உறவு முறை கொண்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தவறான உறவு வைத்திருந்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் பெயிண்டர் வேலை செய்வதற்காக, உறவினர் வீட்டிற்கு இமான்ராஜ் என்ற 32 வயதான வாலிபர் வந்துள்ளார். இவர் அதே வீட்டில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சிறுமியும் அவரது வார்த்தையில் மயங்கி அவரை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் பள்ளி படிக்கும் சிறுமி என கூட பாராமல், தங்கை உறவு முறை கொண்ட சிறுமியுடன் அவர் உடலுறவு கொண்டுள்ளார். நாளடைவில் இவர்களது உறவு குறித்து பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அதிர்ந்து, சிறுமியை கண்டித்துள்ளனர். அந்த வாலிபரிடம் இருந்த தவறான உறவு முறையை கைவிடவேண்டும் என கூறியும், சிறுமி கேட்காததால் காவல்துறையினரிடம் வாலிபர் மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இமான்ராஜை கைது செய்துள்ளனர். மேலும், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இமான் ராஜுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Advertisement