பப்ஜி விளையாட்டுக்காக மனைவியை கதறக்கதற கொன்ற கணவர்.. துள்ளத்துடிக்க அரங்கேறிய கொடூரம்.!



PUBG Addiction Husband Strangles Wife to Death After Argument in Madhya Pradesh

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான கணவரை மனைவி வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்தியதால் கழுத்து நெரித்து கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிவா மாவட்டத்தில் வசித்து வருபவர் ரஜத். அதே பகுதியில் வசித்து வந்த பெண்மணி நேஹா (வயது 24). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே ரஜத் தனது ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. 

வேலைக்கு செல்லாமல் விளையாட்டு:

இதனால் வேலைக்கு செல்லாமல் எப்போதும் பப்ஜி விளையாடியபடி இருந்துள்ளார். இந்த விஷயம் தம்பதிக்கு இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்திய நிலையில், வேலைக்குச் செல்லுமாறு கணவரை நேஹா வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

PUBG Addiction

மனைவி கொலை:

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவி நேஹாவின் கழுத்தை இறுக்கிய நிலையில், அவர் விட்டுவிடுமாறு கதறியுள்ளார். ஆனால் விளையாட்டு மோகத்தில் மனைவி கூறுவதை கேட்காத கணவன் மனைவியை கொலை செய்து வீட்டை விட்டு தப்பி ஓடி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தவே, அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

செல்போனால் அதிகரிக்கும் மரணங்கள்:

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டுக்காக மனைவியையே கொல்லும் அளவிற்கு சென்ற இளைஞரின் செயலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் வந்த நாள்முதல் அதற்கு பலரும் அடிமையாகி கிடக்கின்றனர். சமீக காலமாகவே செல்போனுக்காக பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.