ஒன்பது செயற்கைகோள்களுடன், இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.!pslv-54-rocket-launch-with-9-satellites

 பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து
விண்ணில் ஏவப்படுகிறது. 

இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 
முதல் ஏவுதளத்தில் இருந்து 'பிஎஸ்எல்வி சி-54' என்ற ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. அதாவது ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

rocket

இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும்  8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லவுள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று 56வது முறையாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 5வது முறையாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.