திருமணமான 8 மாதங்களில் ஏரியில் மிதந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்! 11 நாட்களாக மறைக்கப்பட்ட மர்மம் என்ன? அதிர்ச்சி சம்பவம்..!!!



priyanka-body-recovered-kolala-lake-dowry-death-probe

கர்நாடகாவில் திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில் மாயமான 24 வயது கர்ப்பிணி பிரியங்காவின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ம் தேதி கணவர் ராஜசேகர் முன்னிலையில் ஹேமாவதி கால்வாயில் குதித்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. துமகூரு மாவட்டத்தில் உள்ள கோலாலா ஏரியில் தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

11 நாட்களாக நீடித்த தேடுதல் பணி

பிரியங்கா இரண்டரை மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கால்வாயில் குதித்து மாயமான தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கால்வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தேடியும் உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: திருமணமான சில மாதங்களில் மாமனார் வீட்டில் 22 வயது இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்...!!!

இதையடுத்து தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு கோலாலா ஏரியில் பிரியங்காவின் உடல் மீட்கப்பட்டது. உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருவீட்டாரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகள்

பிரியங்காவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தினர் வெவ்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறிய கணவர் ராஜசேகர், வரதட்சணை கொடுமை காரணமாக தங்களது மகளை கொன்றுவிட்டதாக பிரியங்காவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கணவர் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பிரியங்காவின் முதல் திருமணம் குறித்த தகவலை அவரது பெற்றோர் மறைத்ததாகவும், அவரை மிரட்டி ராஜசேகருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நீச்சல் தெரிந்த பிரியங்கா எப்படி நீரில் மூழ்கினார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

தடயவியல் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போலீசார்

இதனால் பிரியங்காவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு மற்றும் சம்பவம் தொடர்பான CCTV பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பிரியங்காவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: தலை விரித்தாடும் சித்திரவதை... கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்! திருமணமான 19 நாட்களில் பி.டெக் மாணவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!