திருமணமான சில மாதங்களில் மாமனார் வீட்டில் 22 வயது இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்...!!!



kanpur-newlywed-woman-death-dowry-allegation

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே திருமணமான சில மாதங்களிலேயே 22 வயது இளம்பெண் மாமனார் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். விபௌசி-நஜஃப்கர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மாமனார் வீட்டில் மர்ம மரணம்

மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருமணமாகி சில மாதங்களே ஆன இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மாமனார் வீட்டார் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: தலை விரித்தாடும் சித்திரவதை... கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்! திருமணமான 19 நாட்களில் பி.டெக் மாணவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!

விடிய விடிய போராட்டம்;

வரதட்சணை கொடுமை காரணமாகவே தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டின் முன்பு அவர்கள் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கான்பூர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இளம்பெண்ணின் கணவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் ஆய்வு; 

சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணத்தால் உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி சில மாதங்களிலேயே நிகழ்ந்த புதுப்பெண் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: தலை விரித்தாடும் சித்திரவதை... கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்! திருமணமான 19 நாட்களில் பி.டெக் மாணவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!