இந்தியா லைப் ஸ்டைல்

பாம்பை பிடித்து இடுப்பில் பெல்ட் போல் அணிந்த நபர்! கடைசி நொடியில் நடந்த ட்விஸ்ட்.

Summary:

Prank video looks like catching snake

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பேய், பிசாசுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த பாம்பை கண்டால் அஞ்சி நடுங்குவதை பார்த்திருப்போம். அதே நேரத்தில் ஒருசிலர் மட்டும் அசால்ட்டாக பாம்பை கையில் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தடவி கொடுப்பது இப்படி செய்தும் நாம் பார்த்திருப்போம்.

சில நேரங்களில் அவர்களது திறமை நமக்கு தென்பட்டாலும் அதுவே பல நேரங்களில் ஆபத்தாக மாறுவதையும் நாம் பார்த்துளோம். அந்த வகையில் இங்கு உள்ள வீடியோ காட்சி ஒன்றில் ஒருவர் நெல்வயலில் இறங்கி பாம்பின் வால்பகுதியை பிடித்து வெளியே இழுக்கிறார்.

அவரை சுற்றி உள்ளவர்களையும் தள்ளிபோகும்படி கூறுகிறார். அவர் பாம்பை பிடிப்பாரா, வெளியே வரும் பாம்பு எப்படி இருக்கும், அவரை கொத்துமா இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நமக்குள் எழுகிறது.

இந்நிலையில் வயலில் இருந்து திடீரென பாம்பை வெளியே உருவி தனது பேண்டில் பெல்ட் போல் கட்டுகிறார். என்னடா பாம்பை பெல்ட் போல் கட்டுகிறார் என உற்றுப்பார்த்தால் உண்மைலயே அது பெல்ட்டுதான். பாம்பு இல்லை. பார்வையாளர்களை பிராங்க் செய்ய எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 


Advertisement