பவர்பேங்கால் வந்த சோதனை, விமான நிலையத்தில் நேர்ந்த விபரீதத்தால் திணறி போன பெண்.!

பவர்பேங்கால் வந்த சோதனை, விமான நிலையத்தில் நேர்ந்த விபரீதத்தால் திணறி போன பெண்.!


powerbank-blast-in-delhi-airport

டெல்லி விமான நிலையத்தில் பெண் ஒருவரின் பவர்பேங்க் வெடித்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 28  ஆம் தேதி மாளவிகா திரிபாதி என்ற பெண் தர்மசாலா செல்வதற்காக வந்துள்ளார்.அங்கு அவரது டிக்கெட் மற்றும் அவர்   கொண்டு செல்லும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது. 

அப்பொழுது பைகளை சோதனை செய்யும்போது அவற்றில் சந்தேகப்படும் வகையில் ஏதோ பொருள் இருப்பது போல அலாரம் அடித்துள்ளது.உடனே போலீசார் அனைத்து பொருள்களையும் சோதனை செய்தபோது பவர் பேங்க் ஒன்று கிடைத்துள்ளது.

 பின்னர் சோதனையாளர்கள் அந்த பெண்ணிடம் பவர் பேங்கை  கொடுத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். 

airport

ஆனால் அவர்களின் செயலால்  கோபமடைந்த அந்த பெண் பவர்பேங்கை வேகமாக சுவரை நோக்கி தூக்கி எறிந்துள்ளார்.சுவரில் பட்டு கீழே விழுந்த பவர் பேங்க் திடீரென வெடித்துள்ளது. இதனால்  போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

 மேலும்  வெடித்தது  வெடிகுண்டு என்று சந்தேகம் அடைந்த போலீசார் நன்கு சோதனை செய்த பின் பவர்பேங்க்தான் என தெரிய வந்ததும் அந்த பெண்ணை விடுவித்தனர்.

 இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது .