விநாயகர் டாலர் அணிந்து மேலாடையின்றி போஸ் கொடுத்த ரிஹானா.! வெளியாகும் கடும் எதிர்ப்புகள்.!

டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா சமீ


Popstar Rihanna poses topless with Ganesha figurine necklace

டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து ஒரே நாளில் அவர் இந்தியாவில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று பிரபலமானார். இந்தியாவின் முக்கிய பிரபலங்களும், எங்களது நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாமென்று அவரது கருத்துக்கு பதிலளித்து இருந்தனர்.

அதேபோல் ரிஹானாவின் கருத்திற்கு பாஜக அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர். சிலர் பாராட்டியும் வந்தனர். இந்நிலையில் ரிஹானாவை புகழ்ந்த மக்கள் தற்போது திட்டத் துவங்கிவிட்டனர். அதற்கு காரணம் அவர் சமூக வலைதளத்தில் மேலாடை அணியாமல் வெளியிட்ட புகைப்படம் தான்.

ரிஹானா மேலாடை அணியாமல், விநாயகர் டாலர் இருக்கும் செயின் அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் கடுப்பாகி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ரிஹானா இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என கூறி, போலீசாரிடம் அவரது சமூக வலைத்தள கணக்குகள் மீது புகார் கொடுத்துள்ளனர்.