இந்தியா Corono+

ஏழை பெண் வாங்கிக்கொடுத்த கூல்ட்ரிங்ஸ்..! உச்சி வெய்யிலில் உள்ளம் குளிர்ந்த போலீசார்..! வைரல் வீடியோ.!

Summary:

Poor women gave cool drinks to cop who works in lock down

ஊரடங்கு உத்தரவின் போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்துல சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்றார் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிர்பானங்களை அளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், அங்கிருந்த அதிகாரி ஒருவர் அந்த பெண் யார்? என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என விசாரிக்கிறார்.

அதற்கு தான் 3000 சம்பளம் வாங்குவதாக அந்த பெண் கூறியுள்ளார். தனது ஏழ்மையிலும் தங்களுக்குகாக உச்சி வெய்யிலில் பணிசெய்யும் காவலர்களுக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கிக்கொடுத்துல சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement