2020-ல் புதுச்சேரியை உலுக்கிய சிறுமிகள் கொத்தடிமை கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கு. 6 குற்றவாளிகளுக்கும் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

2020-ல் புதுச்சேரியை உலுக்கிய சிறுமிகள் கொத்தடிமை கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கு. 6 குற்றவாளிகளுக்கும் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!



Pondicherry Sathamangalam 2020 Child Gang Abuse Case 2022 Dec Judgement Lifetime Prison

 

சிறுமிகளை கொத்தடிமையாக வைத்து போதைப்பொருள் கொடுத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியோருக்கு இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாத்தமங்கலம், கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவன் கன்னியப்பன். இவன் கோர்காடு ஏரி பகுதியில் வாத்து பண்ணை நடத்தி வந்துள்ளான். இவ்வாத்து பண்ணையில் பணியாற்ற வறுமையில் இருக்கும் சிறுமிகளை தேர்வு செய்து, அவர்களின் பெற்றோருக்கு பணம் கொடுத்து சிறுமியரை கொத்தமடிமையாக பயன்படுத்தி வந்துள்ளான்.

Pondicherry

கடந்த 2020ம் ஆண்டு புதுச்சேரி மாநில குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணையில், கன்னியப்பன் உட்பட 3 பேர் சேர்ந்து சிறுமிகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருள் கொடுத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னர் கன்னியப்பன், அவனின் மகன் ராஜ்குமார், பசுபதி உட்பட 6 பேரை கைது சிறையில் அடைத்தனர். 

Pondicherry

இவ்வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கில் இறுதி விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதாவது கன்னியப்பன், அவரின் மகன் ராஜ்குமார், பசுபதி, காத்தவராயன், கன்னியப்பனின் மனைவி சுபா ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பவனுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.