அழகாக பூ கட்டுவதில் நண்பர்களுக்குள் சண்டை.. கத்தியை எடுத்து கரகரவென அறுத்து மார்க்கெட்டில் நடந்த பயங்கர கொலை.!Pondicherry Karaikal Thirunallar Market Flower Shop Worker Murder by Friends

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், திருநள்ளாறு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிசாமி. இவரின் மகன் அருளானந்தம் (வயது 33). இவர் புதுச்சேரியில் உள்ள மார்க்கெட்டில், பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு பூக்கடையில் வேலை பார்ப்பவர்கள் பாலாஜி (வயது 20), பாலா (வயது 22). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். 

வேலை முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து ஊரை சுற்றுவது, மது அருந்துவது என இருப்பது இவர்களின் வழக்கம் ஆகும். இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம்போல மதுபானம் அருந்திய நிலையில், நள்ளிரவு 1 மணிவரை குடித்துள்ளனர். அப்போது, மூவருக்கும் இடையே பூ மாலையை யார் அழகாக காட்டுகிறார்கள் என வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாலாஜி மற்றும் பாலா, அருளானந்தத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை எடுத்து வந்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அருளானந்தம் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். 

Pondicherry

மதுபோதையில் இருந்த இருவரும் தப்பி செல்லவே, அதிகாலை 3 மணியளவில் துப்புரவு பணியாளர் வந்து அருளானந்தத்தின் சடலத்தை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அருளானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது, அதில் பாலாஜி மற்றும் பாலா ஆகியோர் அருளானந்தத்தை கொலை செய்யும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, தப்பியோடிய 2 பேரையும் அதிகாரிகள் தேடிவருகின்றனர்.