இந்தியா

30 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கலையே..! மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்..!

Summary:

Police man try to commit suicide till not married

30 வயது கடந்தும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்ற விரகதியில் காவலர் ஒருவர்  மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்ச்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 30 வயது கடந்த காவலர் ஒருவர் மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர் ஆனால் யார் சொல்லியும் அந்த நபர் கேட்பதாக இல்லை.

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த நபரின் பாதுகாப்பிற்காக போலீசார் மெத்தை போன்ற அமைப்புகளை கீழே விரித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

பின்னர் அந்த காவலரின் நெருங்கிய நண்பர்கள் சிலரை வரவழைத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமார் மூன்று மணிநேரம் கழித்து அந்த நபர் கீழே இறங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அவருக்கு தனிமனித பிரச்சனைகள் அதிகம் இருந்ததாக தெரிகிறது, அதனால்தான் இதுபோன்ற முடிவுக்கு அவர் சென்றுள்ளார் என கூறியுள்ளார்.


Advertisement