முகக்கவசம் அணியாததால் போலீசாரின் அதிரடி! ஆட்டுக் குட்டியை கைது செய்த சம்பவம்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
கொரோனவை கட்டுப்படுத்த சமூக விலகல் மற்றும் முகக்கவசம் கட்டாயம் என இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்தநிலையில் உரிமையாளர் முகக்கவசம்(மாஸ்க்) அணியவில்லை எனக் கூறி, ஆட்டை போலீஸ் கைது செய்த வித்தியாசமான சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஆடுகளை அழைத்துச்செல்லும்போது ஆட்டின் உரிமையாளர் முகக்கவசம் அணியாததால் ஆடுகளை கைது செய்து ஜீப்பில் ஏற்றி எடுத்துச்சென்றுள்ளனர் போலீசார். இதனையடுத்து, இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என கூறி ஆட்டின் உரிமையாளர் தனது ஆட்டை மீட்டுச்சென்றுள்ளார்.