காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!


Police affected corona in mumbai

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியில் இருந்த போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1515 பேர் சிக்கிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3,202 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. ஆனாலும், அம்மாநிலத்தில் கொரோனாவுகு இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக சட்டம் ஒழுங்கு பணியை மேற்கொண்டுவரும் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.