அப்படிப்போடு.. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையில் பிரதமர் மோடியின் வலைப்பக்கம்.. பெண்கள் தின வாழ்த்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!



PM Narendra Modi Social Media Page Handling Today by Chess Player Vaishali

 

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 08, 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. மனதைரியம், விடாமுயற்சி, பாசம், அரவணைப்பு, நிர்வகிக்கும் திறன் என பல விஷயங்களில் தனது சேவையை குடும்பத்திற்காகவும், நாட்டுக்காகவும் செய்து வரும் பெண்களை போற்றும் வகையில், பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் பெண்களின் பணி, மிச்சத்தக்க செயல் ஆகியவற்றை போற்றி பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக பெண்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க: பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!

அப்போது, பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்று ஒருநாள் பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். இந்ரடு ஒருநாள் முழுவதும், பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அனைத்தும், வைஷாலியால் நிர்வகிக்கப்படும்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. இருவர் பரிதாப பலி.!