கொரானா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலி! பிரதமர் மோடியின் பயணம் ரத்து!

கொரானா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலி! பிரதமர் மோடியின் பயணம் ரத்து!


pm-modi-travel-cancels-for-corona


கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிரசெல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக இருந்தார். இந்நிலையில், கொரானா வைரஸ் தாக்குதலால் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசெல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், கடந்த பிப்ரவரி  23ஆம் தேதி இத்தாலியிலிருந்து திரும்ப வரும்போது, அவர் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கவுன்சிலில் பணிபுரியும் மற்றொருவக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

corona

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான  பிரசெல்ஸ்ஸில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 2 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு, அதற்காக அவர்கள் தனிமை சிகிச்சை பெற்று வருகின்றனர்.