முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்.. பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்.. பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்!



Pm modi grievance for the death of former president pranab mukherjee

இந்தியாவின் 13 ஆவது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர் பாரத ரத்னா திரு பிரணாப் முகர்ஜி அவர்கள். உடல்நிலை சரியில்லாமல் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் இன்று மாலை இறந்துவிட்டதாக அவரது மகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரின் இறப்பிற்கு பல தலைவர்கள் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pranab Mukherjee

பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2014 ஆம் ஆண்டில் நான் டெல்லிக்கு வந்த முதல் நாளில் இருந்தே எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவருடைய வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

பாரத ரத்னா திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்தவர். அவர் குடியரசு தலைவராக இருந்த காலத்தில் சாதாரண மக்களும் ஜனாதிபதி மாளிகையை அணுகும் அளவிற்கு வசதிகள் செய்தவர். இவரது இறப்பால் இந்தியாவே வருந்துகிறது" என பதிவிட்டுள்ளார்.