ஃபோட்டோவை கும்பமேளாவில் நனைக்க கட்டணம் இவ்வளவா.? வாட்ஸாப் செய்தால் போதுமாம்.!

அத்துமீறல்கள்
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக செல்பவர்கள் ரயில் நிலையங்களில் செய்யும் அத்துமீறல்கள் மற்றும் பிரயாக்ராஜில் நீரை அசுத்தப்படுத்தும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவது என எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் பெரும் அராஜகம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
மகா கும்பமேளா
இந்த நிலையில் தற்போது மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாத நபர்கள் அவர்களது புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பினால் அதை நீரில் மூழ்கி எடுப்போம் என ஒருவர் பேசுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 13ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி துவங்கியது.
இதையும் படிங்க: #Breaking: பிஎம் ஸ்ரீ திட்டம்.. ரூ.5000 கோடி இழப்பு.. மத்திய அமைச்சர் போட்டுடைத்த உண்மை.. தமிழ்நாட்டுக்கு ஷாக்.!
புகைப்படங்களுக்கு நீராடல்
உலகம் முழுவதும் இருக்கும் இந்து மத ஆதரவாளர்கள் அங்கு திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நபர் வீடியோவில், "வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசித்து வரும் நபர்கள் நீராட வர முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நாங்கள் புகைப்படங்களை நீரில் மூழ்க வைத்து எடுக்கிறோம்.
1100 ரூபாய் கட்டணம்
உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் போதும் இதற்கு 1100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்." என்று தெரிவிக்கிறார். அவரது கைகளில் சில புகைப்படங்களை வைத்து அதை நீரிலும் அவர் முக்கி எடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.