இந்தியா

பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு.! மத்தியஅரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!!

Summary:

petrol teasel price increased announced by nirmala seetharaman

மோடியின் தலைமையிலான புதிய ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோடி தலைமையில் மத்திய நிதியமைச்சரான  நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். 

மேலும் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் அவர் பல அறிக்கைகளை தாக்கல் செய்தார் .மேலும் இதன்படி தங்கத்தின் மீதான சுங்கவரி இதுவரை 10 சதவீதமாக இருந்த நிலையில் இனிவரும் காலங்களில் 12.5 சதவீதமாக அதிகரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

nirmala sitharaman க்கான பட முடிவு

5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு வருமான வரி இல்லை என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதே வரிசலுகை தற்போதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் நிதிப் பாற்றாக்குறை முன்னர், 3.4 சதவிகிதமாக இருந்தது ஆனால் தற்போது அது  3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய படம்

மேலும் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரோடு கட்டமைப்பு என்பதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தலா 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement