திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு சலுகை..!! அரசு அதிரடி அறிவிப்பு..!!Pension for Unmarried Men's and women's

முதலமைச்சர் லால் கட்டார் தலைமையில் ஹரியானா மாநிலத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இதனால் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ருபாய் 2750 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த சலுகையில் வயது வரம்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண் பெண்களுக்கு மட்டுமே இச்சலுகை உண்டு. மேலும், இவர்களது ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கு இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஹரியானாவில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளார்கள்.