மகாப்பிரபு.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?.. கல்யாணம் பண்ணிட்டு காசு கொடுங்க..! புதிய திட்டத்தை அறிமுகம் செய்த செயலி..!!

மகாப்பிரபு.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?.. கல்யாணம் பண்ணிட்டு காசு கொடுங்க..! புதிய திட்டத்தை அறிமுகம் செய்த செயலி..!!


Pay money emi  by marriage now pay later apk

தற்போதைய காலங்களில் கடன் வாங்குவது என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. ஆனால் அதற்கான வட்டித்தொகைதான் தீப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன. சிலர் கந்துவட்டியை தெரிந்தும், தெரியாமலும் வாங்குகின்றனர். பயன்பாடுகளுக்கு ஏற்ப இணைய வழிகளிலும் பல கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன. 

ஆனால் இவைகளின் வட்டித்தொகை மிகவும் அதிகம் என்பதால், அதனை வாங்கினால் இறுதிவரை வட்டியை கூட கட்ட முடியாமல் தவிக்க வேண்டும் என்பது நிதர்சனமாக உள்ளது. ஒரு சில தனியார் வங்கிகள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாதத்தவனை முறையில் கடன் வழங்குகிறது. 

பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு கல்விச்செலவு, வாகனச்செலவு என ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக வட்டி வழங்குவதற்கு அந்நிறுவனங்கள் பல விதிமுறைகளையும் விதிக்கிறது.  

இந்தியா

மேலும் தற்போது திடீர் விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும், அதற்கான செலவுகளை ஈடு செய்யவும் பணம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. 

இதனால் திருமணங்கள் சில நேரங்களில் தள்ளியும் செல்லும். இந்த நிலையில் தற்போது திருமணம் செய்து மாதத்தவணை முறையில் அதற்காக எடுக்கும் செலவுபணத்தை EMI வட்டியாக செலுத்த "Marriage Now Pay Later" என்ற கடன் வழங்கும் செயலி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ஒருவேளை கடன் வாங்கி திருமணம் செய்தபின்னர், திடீர் சிரமத்தால் தவணைத்தொகை கட்டுவது தாமதமானால் மனைவியை கடத்திச்சென்று விடுவார்களா? என கலாய்த்து வருகின்றனர்.