பிரபுதேவா, கௌதம் கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்; குவியும் வாழ்த்துகள்.!

பிரபுதேவா, கௌதம் கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்; குவியும் வாழ்த்துகள்.!


pathma-viruthukal-prahbu-deva-mohanlal-gauthem-gamphir

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், பொறியியல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கி கௌரவிக்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இவ்விருது பட்டியலில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 56 நபர்கள் இடம் பெற்றனர். 

அதன்படி, நடிகர் பிரபுதேவா, பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன்  தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னி வீரர் சரத் கமல், டிரம்ஸ் கலைஞர் சிவமணி, நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. 

மேலும், கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, முன்னாள் வெளியுறவுத் செயலர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

prabudeva

தொடர்ந்து நடிகர் மோகன்லால், விண்வெளித்துறை விஞ்ஞானி நம்பி நாராயணன், காலம் சென்ற பத்திரிக்கையாளர் குல்தீப் நாயர் உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

விருதுகள் பெற்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. விருதுப் பட்டியலில் எஞ்சியவர்களுக்கு மார்ச் 16-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.