இந்தியா

ரயிலில் சுடசுட பரிமாறப்பட்ட ஆம்லெட்.! ஆசையாக சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! கடும் அச்சத்தில் பயணிகள்!!

Summary:

Passenger finds worms in Omelette aboard Deccan Queen train

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையையும்,  புனேவையும் இணைக்கும் ரயில் டெக்கான் குயின் ரயில். இது இந்தியாவின் புகழ்பெற்ற ரயில்களில் ஒன்றாகும். இந்த ரயிலில் சமீபத்தில் பலே என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது மிகுந்த பசியில் இருந்த அவர் சாப்பிடுவதற்காக ஆம்லெட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

இந்நிலையில் சுடசுட அவருக்கு ஆம்லெட் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் , தனை சாப்பிட போகும்போது அதில் இறந்தநிலையில் புழுக்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரயில்வே ஊழியர்களை அழைத்து இது குறித்து புகார் அளித்துள்ளார்.

Representative News Image

பின்னர் அவருக்கு  வேறு உணவு தயார் செய்யப்பட்டு, வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அந்த உணவை புகைப்படம் எடுத்த அவர் அதனை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சாகர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 
 


Advertisement