என்னது!! இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்... பரபரப்பை ஏற்படுத்திய பாதிரியாரின் பேனர்!!

என்னது!! இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்... பரபரப்பை ஏற்படுத்திய பாதிரியாரின் பேனர்!!


Parist father 10-days-i-will-die-and-in-3rd-day-i-will-be-resurrected poster viral

பாதிரியார் ஒருவர் தனக்கு சொந்த இடத்தில் குழி ஒன்றை வெட்டி அதன் அருகில் இன்னும் 10 நாளில் நான் இறந்து அடுத்த 3 நாளில் உயிர்த்தெழுவேன் என்று பேனர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்ணவரம் அருகே கொல்லனபள்ளி சர்ச்சில் பாதிரியார் ஒருவர் இன்னும் 10 நாளில் நான் இறந்து அடுத்த 3 வது நாளில் உயிர்த்தெழுவேன் என விடாப்பிடியாக கூறி வருகிறார். இதனால் பாதிரியாரின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

நவீன மயமான இந்த உலகில் பாதிரியாரின் இந்த ஃப்ளெக்ஸ் பேனர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில் இன்னும் 10 நாளில் இறந்து அடுத்த 3 வது நாளில் உயிர்த்தெழுவேன் என பேனர் ஒன்றை வைத்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.