மகளை எரித்து நீரில் கரைத்த பெற்றோர்! காதலித்ததால் நேர்ந்த கொடூரம்!

மகளை எரித்து நீரில் கரைத்த பெற்றோர்! காதலித்ததால் நேர்ந்த கொடூரம்!


Parents burning the daughter and mixed the ash in the water

ஆணவ கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தை போலவே, தெலுங்கானாவில் ஆணவ கொலைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளை அவரது கணவனிடம் இருந்து பிரித்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் அம்ருதா என்பவர் காதல் திருமணம் செய்ததால், கூலிப்படையினரால் அவரது கணவரை நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதேபோல இப்போதும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளது.

தெலுங்கானாவில் மஞ்சிரியாலா மாவட்டத்தில் அனுராதா, லட்சுமி ராஜன் ஆகியோர் 2 வருஷங்களாக காதலித்து  வந்துள்ளனர். விஷயம் அறிந்த பெண்ணின் பெற்றோர் மகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார் ஆனால் அவர் அதை கேட்கவில்லை. மேலும் மகளை அடித்து, மிரட்டி காவல் நிலையத்தில் ராஜன் மீது புகார் அளித்துள்ளார். பெண்ணை விசாரித்த போலீசார் அவரை மிரட்டி இந்த புகாரை அளித்துள்ளதாக கண்டறிந்தனர். மேலும் பெற்றோருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.

Murder

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி காதலர்கள் இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜத்தில் இந்து முறைப்படி இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தவிஷயம் அனுராதா வீட்டுக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து அனுராதாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அனுராதவை அடித்து இழுத்து வந்து வீட்டில் வைத்து மேலும் அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் அனுராதா மரணமடைந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள் அனுராதாவின் உடலை சாக்குப்பையில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். மேலும் அவரது சாம்பலை அருகில் இருந்த நீர்நிலையில் கரைத்துள்ளனர்.

நான் இறந்துவிட்டால் அதற்கு என் பெற்றோர்தான் காரணம் என அனுராதா ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்ததால் காவல் துறையினர் அவரது பெற்றோரையும், சகோதர்களையும் விசாரித்து வருகின்றனர்.