இந்தியா

காதலனுடன் 19 வயது இளம் பெண் வீட்டுக்குள் தனிமை..! வீட்டை பூட்டிட்டு பெத்தவங்களே செய்த காரியம்.! பரபரப்பு சம்பவம்.!

Summary:

Parents burned daughter and her lover alive near UP

தங்கள் மகள் இளைஞர் ஒருவருடன் வீட்டிற்க்குள் தனிமையில் இருப்பதை பார்த்த இளம் பெண்ணின் பெற்றோர் இருவரையும் வீட்டிற்க்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பந்திரா மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில்தான் இந்த கொடூர செயல் நடந்துள்ளது. 19 வயது இளம் பெண் ஒருவர் அவரது காதலனுடன் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். தங்கள் மகள் இளைஞர் ஒருவருடன் வீட்டிற்குள் தனிமையில் இருப்பதை தெரிந்துகொண்ட பெண்ணின் பெற்றோர் கோபமடைந்துள்ளனர்.

கோபம் கொலைவெறியாக மாறியதை அடுத்து இருவரையும் அதே குடிசை வீட்டிற்குள் பூட்டிவைத்து, வீட்டின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் இளம் பெண், இளைஞர் இருவரும் உடல் வெந்து வீட்டிற்க்குள் அலறி துடித்துள்ளனர். வீடு எரிவதை பார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் இருந்த இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதிகமான வெப்பத்தினால் அவர்களால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

பின்னர் தீயின் வேகம் குறைந்த பிறகு உள்ளே சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ஆனால் போகும் வழியில்லையே அந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்துள்ளார். 80 % தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் வீட்டை சேர்ந்த 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement