காதலனுடன் சேர சிறுமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்: முடிவு எடுக்க தடுமாறும் போலீசார்..!

காதலனுடன் சேர சிறுமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்: முடிவு எடுக்க தடுமாறும் போலீசார்..!


parents-are-shocked-by-the-girls-decision-to-join-her-b

அசாம் மாநிலம், கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதன் பின்னர் இவர்கள் பல்வேறு இடங்களுக்கு தனிமையில் சென்று காதலை வளர்த்துள்ளனர்.

இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் அந்த இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். அதில் இளைஞருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் (எய்ட்ஸ்) நோய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருடன் வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரையும் தேடி கண்டுபிடித்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இளைஞரை கைது செய்த காவல்துறையினர், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சிறுமி தனது காதலனுடன் இருக்கும்போது அவரது ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டதாகவும், காதலனுடன் சேருவதற்காக இதனை செய்ததாகவும் கூறி அதிர்ச்சியளித்தார். மேலும் தனது காதலனை விடுவிக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.