BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒடிசாவில் பயங்கரம்.. பக்தர்கள் சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து.. 8 பேர் பலி..!
ஒடிசா மாநிலம் கியோன்ஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21 பேர் தங்கள் பகுதியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாரணி கோயிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்ற அந்த வேன் ஆனது அதிகாலை கியோன்ஞ்சர் மாவட்டம் கடாகோன் பகுதிக்கு அருகிலுள்ள பலிஜோடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது பனிமூட்டத்தின் காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதி உள்ளது.

இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்த பக்தர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.