வாழைப்பழம் விற்க இங்கு முற்றிலும் தடை.! இதுதான் காரணமா? வெளியான அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

வாழைப்பழம் விற்க இங்கு முற்றிலும் தடை.! இதுதான் காரணமா? வெளியான அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!


pan to sale banana in lucknowrailway station

உத்திரபிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள சார்பாக் இரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது.மேலும் தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கூடும் இடமாக இந்த ரயில் நிலையம் உள்ளது.இதன் வழியாக தினம்தோறும் நூற்றுக்கணக்கான இரயில் வண்டிகள் வந்து செல்கின்றன.

இந்த ரயில் நிலையத்திற்கு வெளியே சிறு வியாபாரிகள் வாழைப்பழங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவசரமாய் சாப்பிடமுடியாமல்  கிளம்பும் பயணிகள் பசி தாங்கக்கூடியது என்பதாலும், விலை குறைந்தது என்பதாலும்  வாழைப்பழங்களை வாங்கி செல்வர்.

banana

இந்நிலையில் அவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு கண்ட இடங்களில் தூக்கி வீசுவதால் ரயில் நிலையத்தை சுற்றியும் வாழைப்பழ தோல்களால் அசுத்தமாகிறது என ரயில் நிர்வாகம் வாழைப்பழ விற்பனையை தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைப்பழங்களின் விற்பனைக்கு தடை விதிப்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும், ஏழைகளின் உணவாகப் பயன்படுத்தும் வாழைப்பழ தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.