மகள் என அழைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன்! தந்திரமாக நடந்த கல்லூரி மாணவி!

Paliyal kodumai


Paliyal kodumai

உத்திர பிரதேச மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் சுவாமி சின்மயானந்தா. இவர் தனது சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதற்காக கடந்த 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது அவரது உடல் சரியில்லாத காரணத்தால் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புகார் கூறிய மாணவி தன்னை சின்மயானந்தா எவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதாவது நான் அவரை என் படிப்பு விசயமாக அடிக்கடி சந்திப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் நான் சென்றிருந்தபோது அவர் என்னை அவரது அறைக்கு அழைத்துச்சென்று கையில் தொலைபேசி ஒன்றை கொடுத்தார். அதில் நான் குளிப்பதை வீடியோவாக பதிவேற்றி இருந்தார்.

அதை பார்த்ததும் நான் அழ தொடங்கினேன். ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அழாதே நான் சொல்வதை செய்தால் இந்த வீடியோவை இணையத்தில் விடமாட்டேன் எனக் கூறினார். இல்லை என்றால் இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டேன். அப்போது அவர் உடலில் ஒட்டுத் துணியின்றி ஆயில் மசாஜ் செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அதற்கு இணங்காமல் மறுத்தேன். உடனே அவர் என்னை எட்டி உதைத்து, அடிக்கச் செய்தார்.

மேலும் தினமும் என்னை அழைத்துச் செல்ல அவரது பாதுகாவலர் வந்துவிடுவார். என்னைக் கூட்டிச் சென்று தினமும் அவர் சித்திரவதை செய்வார். சில சமயங்களில் எனக்கு மாதவிடாய் என்று கூறியும் விடமாட்டார்.

அவரின் இந்தக் கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கோடு தான் கேமரா உள்ள மூக்கு கண்ணாடியை வாங்கினேன். அதன்மூலம் அவர் செய்யும் கொடுமைகளை வீடியோவாக எடுத்து தற்போது அவரை சிக்க வைத்து உள்ளேன் என்று உருக்கமாக அந்த மாணவி கூறியுள்ளார்.