6 மாத காதல், லிவிங் டுகெதர் வாழ்க்கை.. கம்பி நீட்டிய காதலன் வீட்டில் தர்ணா போராட்டம்... கேரளாவில் தமிழ்ப்பெண் கண்ணீர்..!

6 மாத காதல், லிவிங் டுகெதர் வாழ்க்கை.. கம்பி நீட்டிய காதலன் வீட்டில் தர்ணா போராட்டம்... கேரளாவில் தமிழ்ப்பெண் கண்ணீர்..!


palani-woman-chennai-worked-protest-at-kerala-malappura

வேலைக்காக சென்னை வந்த பெண்மணி காதல் வலையில் விழுந்து, காதலனின் ஆசைக்கு பலியாகி கைவிடப்பட்டு சென்ற துயரம் நடந்துள்ளது. காதலனை தேடி கேரளாவில் தமிழ்ப்பெண் தர்ணா போராட்டம் நடத்தி வரும் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மஞ்சேரி கிராமத்தை சேர்ந்த வாலிபர், சென்னையில் தங்கியிருந்து பயின்று வருகிறார். பழனியை சேர்ந்த இளம்பெண் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியதை தொடர்ந்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். 

இளம்பெண்ணிடம் திருமண ஆணைவார்த்தை கூறிய இளைஞர், 6 மாதமாக பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த 6 மாதத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஊருக்கு புறப்பட்டு சென்ற இளைஞர், தந்தையிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்கி வருவதாக கூறி புறப்பட்டுள்ளார். 

palani

ஊருக்கு சென்றதில் இருந்து எந்தவிதமான அழைப்பும் வராத நிலையில், சந்தேகமடைந்த பெண்மணி மஞ்சேரியில் இருக்கும் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பெண் தெரிவித்த அடையாளத்துடன் வாலிபரே இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாலிபர் அந்த வீட்டை சேர்ந்தவர் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, 3 நாட்களாக வாலிபரின் வீட்டிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் பெண்மணி ஈடுபட்ட காரணத்தால், வாலிபர் மற்றும் அவரின் பெற்றோர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தமிழ்நாட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.