தனியாக கடலில் அவரது பூனையுடன் 25 நாட்கள் பயணித்த நபர்! என்ன காரணம் தெரியுமா! வைரலாகும் காணொளி....



oliver-solo-sailing-journey-with-cat

ஒரு மனிதனும் ஒரு பூனையும் கடலில் பயணித்த ஓலிவரின் துணிச்சல் வாழ்க்கை பயணம்.

அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிவர் என்ற நபர், சமீபத்தில் மருத்துவர்களால் "பராலிசிஸ் ஏற்படுத்தும் சிண்ட்ரோம்" எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டார். வாழ்க்கையின் சுவையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன், தனது வேலை வாய்ப்பை இராஜினாமா செய்து, கடல் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார்.

தனியாக கடல் பயணம்:

ஏப்ரல் மாதம், தனது செல்லப் பூனையுடன் மட்டும், ஹவாய் நோக்கி தனியாகக் கடலில் பயணிக்க அவர் முடிவு செய்தார். 25 நாட்கள் நீடித்த இந்தப் பயணம், வாழ்க்கையை மீண்டும் தேடிச் சென்ற ஓர் அரிய அனுபவமாக அமைந்தது. கடைசியில் ஹவாயின் கடற்கரையை அடைந்தபோது, அமெரிக்க கடலோர காவல்படை அவரையும் அவரது பூனையையும் பாதுகாப்பாக வரவேற்றது.

துணிச்சல் மற்றும் ஊக்கம்:

அந்த நெகிழ்ச்சியான தருணத்தை ஓலிவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பயமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தின் உயிர்ப்பான எடுத்துக்காட்டாக ஓலிவரின் இந்த பயணக் கதை அமைந்துள்ளது. தனிமையிலும், நோயினையும் தாண்டி, உள்ளம் உந்தும் கனவுகளுக்குப் பக்கபலமாக இந்த பயணம் பலருக்கும் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது.