முதியோர் இல்லத்தில் கோலாகல திருமணம்! 65 வயதில் இணையும் ஜோடி! நெகிழ வைக்கும் உணர்வுபூர்வமான காதல்கதை !



old-couple-going-to-marry-in-old-age-orphanage

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவரது கணவர் ஜிகே கிருஷ்ணா ஐயர். இவர் சமையல் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணா ஐயர் 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதற்கிடையில் உடல்நிலை மோசமாகி மரண படுக்கையில் இருந்த அவர் தனது உதவியாளரான கோச்சானியன் என்பவரை அழைத்து,  எனது மரணத்திற்கு பின்பு நீதான் என் மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாள் மற்றும் கோச்சானியன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும்,  தீராத அன்பும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 65 வயது நிறைந்த லட்சுமி அம்மாள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மேலும் கோச்சானியன்  பல்வேறு இடங்களுக்கு சமையல் வேலையாக சென்று வந்துகொண்டிருந்தார்.

marriageஇந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக கோச்சானியன்  சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அவரை கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர் அவரை மீட்டு லட்சுமி அம்மாள் தங்கியுள்ள அதே முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான கதைகளை கேட்ட அந்த முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெயக்குமார், லட்சுமி அம்மாள் மற்றும் கோச்சானியன் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இருவருக்கும் திருமணம் வரும் 30ஆம் தேதி முதியோர் இல்லத்திலேயே நடைபெற உள்ளது. இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.