ஓலா பியூச்சர் பேக்டரியில் 10,000 பெண்களுடன் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்.. அசத்தல் அறிவிப்பு.!!

ஓலா பியூச்சர் பேக்டரியில் 10,000 பெண்களுடன் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்.. அசத்தல் அறிவிப்பு.!!


Ola Future Factory Works 10 Thousand Woman Employees Ola Electric Announce

ஓலாவின் ஓலா எஸ் 1, ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஓலா நிறுவனம் சார்பாக இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டார்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில், முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியுடன் எலக்ட்ரிக் பைக்குகளை வழங்கும் பொருட்டு, சென்னை மற்றும் பெங்களூர் நகரத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பைக்குகள் வழங்கப்பட்டன. 

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி வருண் துபே தெரிவிக்கையில், "ஓலா எஸ் 1 டெலிவரியுடன் இணைத்தவர்களுக்கு இந்நாள் முக்கியமான நாள் ஆகும். ஓலா பியூச்சர் பேக்டரியில் உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக உழைத்து வருகிறோம். இது புரட்சியின் தொடக்கம் தான். வாடிக்கையாளர்களுக்கு தரமான, வசதியான, தடையற்ற டெலிவரியை செய்ய பணியாற்றி வருகிறோம். 

Ola

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் நல்லதொரு சவாரியை ஏற்படுத்த, சில்லறை விற்பனை வரலாற்றில் மிகப்பெரிய நேரடி நுகர்வோர் அனுபவம் குறித்த முயற்சிக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஓலா எஸ் 1 ஸ்கூட்டர் பியூச்சர் பேக்டரியில் தயாரிக்கப்படும். இது உலகின் மிகப்பெரிய, மேம்பட்ட நிலைகொண்ட இருசக்கர வாகன தொழிற்சாலை ஆகும். 

வருடத்திற்கு 10 மில்லியன் வாகனம் என்ற உற்பத்தி திறனில், ஓலா பியூச்சர் பேக்டரியில் 10,000 பெண்கள் பணியாற்றி வாகனத்தை உருவாக்குவார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும்" என்று தெரிவித்தார்.