அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தண்ணீர் என டீசல் குடித்த 18 மாத குழந்தை பரிதாப மரணம்.. பெற்றோரே அலட்சியமாக இருக்காதீங்க..!
தவழும் வயதில் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடிய குழந்தை, பெற்றோரின் அலட்சியமான செயலால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாலசோர், அருகாபுருதி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் பெஹ்ரா. இவர் கை ரிக்சா தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 18 மாதமாக வேதாந்த் என்ற மகன் இருக்கிறான். குழந்தை வேதாந்த் சம்பவத்தன்று சமையலுக்கு உபயோகம் செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்து இருக்கிறான்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளளான். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த போகரை காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.