தமிழகம் இந்தியா

தனிநாடு வாங்கிய நித்தியானந்தாவுக்கு இன்டர்போல் அதிரடி நடவடிக்கை!

Summary:

nterpol Notice Against Nithyananda


இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று 'கைலாசா' என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசான இண்டர்போல், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. 

சிறுவர், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய குஜராத் போலீசார், அண்மையில், நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். 

இந்தநிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்தியானந்தா பதுங்கியிருக்கும் நாட்டைச் சேர்ந்த காவல்துறையினர், இண்டர்போல் மூலமாக, குஜராத் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதன்படி, நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை  செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது


Advertisement