அடக்கொடுமையே... கல்லூரிக்குச் சென்ற மாணவன் திடீர் மாயம்! 23 ஆண்டுகளுக்கு பின்... நடமாடும் பிணமாக வீடு திரும்பிய கொடூரம்.!!!
கல்லூரிக்குச் சென்ற 19 வயது மாணவர், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த நிசார்-உத்தீன் அகமது, 1993-ம் ஆண்டு நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் அவரது குற்றச்சாட்டுகளை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.
கல்லூரிக்குச் சென்ற மாணவர் திடீர் மாயம்
நிசார்-உத்தீன் அகமது, 19 வயதில் மருந்தியல் கல்லூரியில் படித்து வந்தார். 1994 ஜனவரி 15-ம் தேதி, தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், வழக்கம்போல் வீட்டிலிருந்து கல்லூரிக்குப் புறப்பட்டார். ஆனால், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை.
ஹைதராபாத் காவல்துறையினர் அவரது வீட்டுக்கு அருகிலேயே அவரை ரகசியமாகக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படாததால், ஆறு வாரங்களாக நிசார் எங்கே இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் போனது.
தடா சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை
1993 டிசம்பரில் கோட்டா, ஹைதராபாத், சூரத், கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக நிசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் காவலில் இருந்தபோது அவர் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமே வழக்கின் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.
அப்போது நடைமுறையில் இருந்த தடா சட்டத்தின் கீழ், காவல்துறையிடம் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மகனை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை நூர்-உத்தீன் அகமது தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால், 2006-ம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விடுதலை
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 2016 மே 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் நிசார்-உத்தீன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, தனது 43-வது வயதில் ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் இணைந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்தபோது தனது நிலையை விவரித்த நிசார், “23 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சுதந்திரமாக இருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் பார்ப்பது ஒரு நடமாடும் பிணத்தைத்தான்” என்று வேதனையுடன் கூறினார். இளமைக் காலத்தையும் குடும்பத்துடன் கழிக்க வேண்டிய ஆண்டுகளையும் சிறையில் இழந்த அவரது வாழ்க்கை, நீண்டகால சிறைவாசத்தின் வலியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை! உடனே தடியால் அடித்துக் கொன்ற கணவன்... பகீர் சம்பவம்..!!!