அம்மா எந்திரிம்மா...! பயமா இருக்கு..! தூக்கில் தொங்கிய தாய்... கால்களை பிடித்து இரவு முழுவதும் கதறி அழுத குழந்தை! விடிந்ததும் போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் கணவரைப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது என்று புரியாமல், இரவு முழுவதும் தாயின் அருகிலேயே இருந்த 3 வயது குழந்தையை மறுநாள் போலீசார் மீட்டனர்.
ஓராண்டாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த சுவாதி
கர்நூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் திருமணமாகி, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் சுவாதி தனது குழந்தையுடன் சொந்த ஊரில் உள்ள தாயார் வீட்டில் தங்கியிருந்தார்.
இதையும் படிங்க: ஏன்டா இப்படி இருக்கீங்க.? லாரி கவிழ்ந்ததும் ஓடிவந்த மக்கள் கூட்டம்..! டிரைவரைக் காப்பாற்ற அல்ல.. எதுக்குன்னு நீங்களே பாருங்க! வைரல் வீடியோ...!!!
இந்நிலையில், வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில் கடும் மன உளைச்சலில் இருந்த சுவாதி, படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாய்க்கு என்ன ஆனது என்று தெரியாத 3 வயது குழந்தை, அவரது அருகிலேயே இருந்துள்ளது.
இரவு முழுவதும் தாயின் அருகே அழுத குழந்தை
இரவு முழுவதும் தாயின் கால்களைப் பிடித்துக்கொண்டு குழந்தை கதறி அழுததாகக் கூறப்படுகிறது. பின்னர் அழுதுகொண்டே சோர்வடைந்த குழந்தை, அதே அறையில் இருந்த நாற்காலியில் மயங்கி விழுந்துள்ளது. இதற்கிடையே, மறுநாள் காலையிலும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.
கதவை உடைத்து குழந்தையை மீட்ட போலீசார்
இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கையறையில் சுவாதி உயிரிழந்த நிலையில் கிடந்தார். அருகில் இருந்த நாற்காலியில் குழந்தை சுயநினைவின்றி கிடந்தது.
உடனடியாக குழந்தையை மீட்ட போலீசார், அதன் உடல்நிலையைப் பரிசோதித்து தேவையான உதவிகளைச் செய்தனர். இதற்கிடையே, சுவாதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். குடும்பத் தகராறும் தற்கொலைக்கான காரணமும் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அர்ணாப் புயலின் ராட்சத அலைகள்..! சல்பர் மூட்டைகளுடன் தரைத்தட்டி தத்தளிக்கும் பிரம்மாண்ட கப்பல்..! வைரலாகும் புயலின் தாக்கம்..!!!