வாங்கி இரண்டே நாளான மொபைல் திடீரென வெடித்ததில் இளைஞருக்கு படுகாயம்!

வாங்கி இரண்டே நாளான மொபைல் திடீரென வெடித்ததில் இளைஞருக்கு படுகாயம்!


New Mobile phone exploded in pocket

ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது அவரது பாக்கெட்டில் இருந்த புதிய மொபைல் போன் திடீரென வெடித்துள்ளது. 

ஹைதராபாத்தை சேரந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்பு தான் OPPO A5 என்ற புதிய மொபைல் போனை வாங்கியுள்ளார். நேற்று அந்த போனை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அந்த இளைஞர் பைக்கில் சென்றுள்ளார். 

ரோட்டில் சென்று கொணீடிருந்த போது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த அதிர்ச்சியில் பைக்கில் இருந்து கீழே விழுந்த அவருக்கு கண்ணம் மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள OPPO நிறுவனம், "இந்த விபத்து எதிர்பாராத சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இதுகுறித்து மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காயப்பட்ட வாடிக்கையாளர் குணமடைய எங்களால் இயன்ற வரையில் உதவி செய்ய தயார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.