இந்தியா காதல் – உறவுகள்

திருமணமான ஒரு வாரத்திலேயே இப்படியொரு துயரமா? துடிதுடித்து கதறிய புதுப்பெண்! மனதை உருக்கும் புகைப்படம்!

Summary:

new married groom

தெலுங்கானா மாநிலம் அச்சுடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கல்யாண். இவர் ஓட்டுநர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கல்யாண் புஷ்பலதா என்ற பெண்ணை கடந்த 1 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் இவர்களது காதலுக்கு புஷ்பலதா குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த வாரம் வீட்டை விட்டு ஓடி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் அவர்களை சந்தித்து எங்களுடன் வந்தால் நாங்களே பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைக்கிறோம் என நம்பிக்கை அளித்துள்ளனர். அதனை நம்பி கல்யாண் மற்றும் புஷ்பலதா இருவரும் பெற்றோர்களை தேடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் குறித்து உறவினர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் புஷ்பலதாவின் உறவினர் ரவி என்பவர் திடீரென கத்தியால் கல்யாணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் கல்யாண் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட புஷ்பலதா கதறி அழுதுள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 திருமணமான ஒரு வாரத்திலேயே கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,  புஷ்பலதா சோகத்துடன் அவரது அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை  கண்கலங்க வைக்கிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


Advertisement