திருமணமான 3 நாளிலேயே தூங்கி எழுந்த புதுமாப்பிளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் சம்பவம்!

திருமணமான 3 நாளிலேயே தூங்கி எழுந்த புதுமாப்பிளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் சம்பவம்!


New married girl cheating groom in 3days

உத்திரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராம். இவரது மகன் பிரவீன்.  இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும் மணப்பெண்ணை தரகர் டிங்கு என்பவர் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தனது மனைவியுடன் பிரவீன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பெண் தரகர் டிங்கு என்பவரும் உடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் இரவு பிரவீன் மனைவி தங்கள் கைகளாலேயே சமைத்து அவரது கணவருக்கும், குடும்பத்தாருக்கும் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பிரவீன்  குடும்பத்தினர் அனைவரும் மயங்கியுள்ளனர். ஆனால் மறுநாள் காலையில் பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தார்கள் மயக்கம் தெளிந்து மிகுந்த சோர்வுடன் எழுந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

marriage

அதாவது பிரவீனின் மனைவி மற்றும் தரகர் டிங்கு இருவரும் வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு, பிரவீன் குடும்பத்தாரை ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய செயலால் பிரவீனின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.