Good News: கொரோனா தடுப்பு சட்ட விதிகள் இரத்து - அதிரடி உத்தரவு.! 

Good News: கொரோனா தடுப்பு சட்ட விதிகள் இரத்து - அதிரடி உத்தரவு.! 



National Disaster Management Authority revokes Disaster Management Act Covid Measures

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 வருடமாக 3 அலைகளாக மக்களை வாட்டி வதைத்தது. கொரோனாவின் தொடக்கத்தில் மக்கள் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளால் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து கிடைத்த அனுபவங்களை வைத்து மக்கள் சுதாரித்துக்கொண்ட நிலையில், முகக்கவசம் அணிவது மற்றும் தடுப்பூசி செலுத்துவது போன்ற நோய்தடுப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. 

world

இதனால் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது நான்காவது அலை பரவல் ஏற்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது. ஆனால், நான்காவது கொரோனா அலை பரவல் உறுதி செய்யப்படவில்லை. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதால், அது சந்தேகமே என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் அஜய் பல்லா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை இரத்து செய்கிறோம். முகக்கவச பயன்பாடு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை தோடிரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.